இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரில் மூன்றாவது போட்டியானது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 5 வது நாளாக இன்று நடைபெற்று வந்த நிலையில் மழை காரணமாக சமனில் முடிந்தது. பின் செய்தியாளர் சந்திப்பில் அஸ்வின் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசினர் அதில் தமிழக வீரர் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தார்.
2014 ஆஸ்திரேலியாவுடன் 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான் எம் எஸ் தோனி டெஸ்ட் ஓய்வு அறிவித்தார். அது போலவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரில் 3 போட்டி முடிந்த பின் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்தார்.
இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இவர் தனது கடைசி போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி தான் எனது கடைசி என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இதனை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் உருக்கமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.