விஜய் குறித்து கூறிய அஸ்வின்!! எனக்கு அடுத்து இவர்தான்.. வெளியிட்ட புதிய தகவல்1

0
318
actor vijay and aswin

Cricket : விஜய் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் வருவது போல கிரிக்கெட் வீரரை குறிப்பிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்திய அணியின் மிக முக்கிய விரைவில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு அறிவித்தார். இது குறித்து தி கோட் திரைப்படத்தில் வரும் காட்சியை குறிப்பிட்டு எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியை சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு அறிவித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது போட்டி கபா மைதானத்தில் நடைபெற்று வந்தது இந்த போட்டி சமனில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிந்தபின் செய்தியாளர் சந்திப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் அனைத்து விதமான சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தமிழக சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிவகார்த்திகேயன் துப்பாக்கிய புடிங்க சிவா என்ற வசனத்தை குறிப்பிட்டு வாஷிங்டன் சுந்தருக்கு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இது விஜய் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.