Cricket : இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதை அடுத்து பல ரசிகர்கள் தமிழ் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிக முக்கிய விரைவில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் தமிழகத்தை சேர்ந்த வீரர். இவர் சிறிது காலமாக போட்டிகளில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது நேற்று முன்தினம் ஓய்வு அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வந்த மூன்றாவது போட்டியானது கபா மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று முன்தினம் போட்டி சமனில் முடிவடைந்தது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தான் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வை பதிவு செய்தார்.
தான் அடிலைட் மைதானத்தில் விளையாடிய போட்டிதான் விளையாடிய கடைசி போட்டி என அறிவித்தார். இதனை அடுத்து தமிழக முதல்வர், தமிழக பிரபலங்கள், மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உருக்கமான பதிவை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் உலகம் கண்டிராத மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகவும், தமிழ்நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும் நீங்கள் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறீர்கள் . உங்களின் கடுமையான போட்டி மனப்பான்மை மற்றும் தூய கிரிக்கெட் நுண்ணறிவு, நவீன விளையாட்டில் நிகரில்லாதது, கிரிக்கெட் பிரியர்களின் இதயங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டுள்ளது. நன்றாக முடிந்தது உங்கள் அடுத்த அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள். என கூறினார்.
அதற்கு பதில் அளித்த அஸ்வின் மிக்க நன்றி ஐயா, நான் உங்களை பிக் பாஸில் மிஸ் பண்றேன் நகைச்சுவையான பதிலினை வெளியிட்டார். தற்போது இது வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது