அஷ்வினின் அபாரமான பந்துவீச்சு! முதல் டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா!!
ரவிச்சந்திரன் அஷ்வின் அவர்களின் அபாரமான பந்துவீச்சினால் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
கடந்த ஜூலை 12ம் தேதி இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டிஸ் அணிகளுக்கு இடையேயான.முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இன்டிஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இன்டிஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இன்டிஸ் அணியில் அதிகபட்சமாக அலிக் அதனசே 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
150 ரன்கள் பின்னிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்திய அணியில் முதல் இன்னிங்ஸில் அறிமுகப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஷிவால் சதம் அடித்து 171 ரன்கள் சேர்த்தார். ரோஹித் சர்மா சதம் அடித்து 103 ரன்கள் சேர்த்தார். விராட் கோஹ்லி அரைசதம் அடித்து 76 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இன்டீஸ் அணியில் ரோச், கார்ன்வால், வர்ரிக்கன், அல்சாரி ஜோசப், அலிக் அதனசெ ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 271 ரன்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இன்டிஸ் அணி ரவிச்சந்திரன் அஷ்வின் அவர்களின் அதிரடிய்ன பந்துவீச்சினால் 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இன்டிஸ் அணியில் அலிக் அதனசெ 28 ரன்கள் சேர்த்தார். ஜேசன் ஹோல்டர் 20 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஷ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா.இரண்டு விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து 171 ரன்கள் சேர்த்த யஷஸ்வி ஜெய்சிவ்ல் அவர்கள் ஆட்ஞநாயகன் விருதை வென்றார்.