ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை!
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 31 இன்னிங்ஸ்களில் 2000 ஒருநாள் ரன்களை மிக வேகமாக எட்டிய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அந்த நாட்டுக்காக அதிக ஒரு நாள் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் முந்தைய சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
லாகூரில் பங்களாதேஷுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் அசாம் 22 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும், பாபர் அசாம் 31 இன்னிங்ஸ்களில் 2000 ஒருநாள் ரன்களை எட்ட உதவியது.
கோலி 36 இன்னிங்ஸ்களில் சாதித்தார். இவர்களை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 41 இன்னிங்ஸ் சாதனை படைத்தனர்.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஹரிஸ் ரவுஃப் 6 ஓவர்கள் வீசி 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், நசீம் ஷா 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேசம் 38.4 ஓவரில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் பாபர் அசாம், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பெற்றார். அன்று முதல் இன்று வரை அவர் உலகின் நம்பர் ஒன் அணியாக பாகிஸ்தானை அணியை முன்னேற்றியுள்ளார்.
இந்நிலையில், வரும் புதன்கிழமை இலங்கை, கொழும்பில் சூப்பர் ஃபோர் லீக் ஆட்டத்தில், இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். தற்போது பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.