Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆசியக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… சச்சினுக்கும் கோலிக்கும் மறக்க முடியாத அந்த போட்டி!

ஆசியக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான்… சச்சினுக்கும் கோலிக்கும் மறக்க முடியாத அந்த போட்டி!

2012 ஆம் ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இரண்டு காரணங்களுக்காக மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

ஆசியக்கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த முறை பலம் மிக்க அணிகளாக பாகிஸ்தானும், இந்தியாவும் கருதப்படுகின்றன. இதில் ஏதாவது ஒரு அணிதான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுவரை ஆசியக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளிலேயே மறக்க முடியாத போட்டி ஒன்றைப் பற்றி பார்ப்போம். 2012 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட் இழந்து 329 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47. 5 ஓவர்களில் அசால்ட்டாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில்தான் கோலி ருத்ரதாண்டவம் ஆடி 183 ரன்கள் சேர்த்தார். இன்றுவரை கோலியின் அதிகபட்ச ரன்னாக இந்த போட்டியில் எடுத்த ரன்தான் உள்ளது.

அதுபோல சச்சினுக்கு இந்த போட்டி மிக முக்கியமாக அமையக் காரணம் ஒருநாள் போட்டிகளில் இதுதான் சச்சினின் கடைசி போட்டி. இந்த போட்டியில் சச்சின் 52 ரன்களை சேர்த்தார். கோலியோடு இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்துத் தந்தார்.

Exit mobile version