ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! மங்கோலியாவை 22 ரன்களுக்கு சுருட்டிய ஹாங்காங்!!! 

0
149
#image_title

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! மங்கோலியாவை 22 ரன்களுக்கு சுருட்டிய ஹாங்காங்!!!

நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் கிரிக்கெட்டில் மங்கோலியா அணியை 22 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்ற ஹாங்காங் அணி காலிறுதிக்கு முன்னேறியது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் 20 போட்டியில் நேற்று(செப்டம்பர்20) மங்கோலியா மகளிர் அணியும் ஹாங்காங் மகளிர் அணியும் மோதியிது. இதில் டாஸ் வென்ற மங்கோலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

ஹாங்காங் அணியில் அதிகபட்சமாக ஹாங்காங் அணியின் கேப்டன் கேரி சான் அரை சதம் அடித்து 70 ரன்கள் குவித்தார். மரியம் பிபி 36 ரன்களும், மிலேஸ் 30 ரன்களும், சான் டு 30 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 203 ரன்கள் என்ற மெகா இலக்கை வெற்றி இலக்காக கொண்டு மங்கோலியா அணி களமிறங்கியது. ஹாங்காங் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாத மங்கோலியா அணி டி20 போட்டியை டெஸ்ட் போட்டியாக விளையாடியது.

ஹாங்காங் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளாமல் விளையாடிய மங்கோலியா தட்டு தடுமாறி 22 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை தழுவியது. இதையடுத்து ஹாங்காங் அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பாண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளின் காலிறுதி போட்டிக்கு ஹாங்காங் மகளிர் அணி முன்னேறியுள்ளது. நாளை அதாவது செப்டம்பர் 22ம் தேதி நடைபெறும் நான்காவது காலிறுதி போட்டியில் வங்கதேசம் மகளிர் அணியுடன் ஹாங்காங் மகளிர் அணி விளையாடவுள்ளது.

மங்கோலியா மகளிர் அணி முதல் லீக் போட்டியில் இந்தோனேசியா அணியிடம் 10 ஓவரில் 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து இரண்டாவது லீக் போட்டியில் ஹாங்காங் அணியுடன் விளையாடிய போட்டியில் 22 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வியை சந்தித்து பரிதாபமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை விட்டு வெளியேறியுள்ளது.