குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!!

0
72
Attention Citizens!! Tamil Nadu Tasmark stores sales time change!!

குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!!

தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் மூலம் மது பாட்டில்கள் விற்பனை  செய்யப்பட இருப்பதாக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போலி மதுபானங்களை தடுக்கும் விதமாக கண்ணாடி பாடில்களுக்கு பதிலாக இனி டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு மது பாட்டில்களை சாலையில் வீசி செல்வதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போன்ற பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதால் இது விவசாயிகளுக்கு நன்மை அளிக்க கூடிய ஒன்றாகும்.இதனால் டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்ய இருப்பதாகவும் இதுகுறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காலையிலேயே  மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை எழுப்பியதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் காலை 7 மணிக்கே மதுபான கடையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியதாகவும் இது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மதுபான கடைகள் மதியம் 12 முதல் இரவு 10 வரை செயல்பட்டு கொண்டு வருகின்ற நிலையில் காலையில் கடைகளை திறக்க மக்கள் கோரிக்கை எழுப்பியதாக கூறப்படுகின்றது.

அதனால் டாஸ்மார்க் கடைகளின் விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது.

மேலும் இந்த கூட்டத்தில் மது பாட்டில்களுக்கு  ரூ.10 கூடுதலாக வாங்கப்படுவதை தடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.