பிளஸ் 1 மாணவர்களின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் தற்பொழுது நடப்பு ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு , தேர்வுகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.
மேலும் மாநிலங்களின் பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுகள் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதற்கட்டமாக நடப்பு ஆண்டு பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு இருப்பதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த தேர்வு செப்டம்பர்23 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வை எழுத மாணவர்கள் அனைவரும் விண்ணபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வை எழுத ஆயிரக்கணகான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் நடக்க உள்ள இந்த தேர்விற்கு நடப்பு ஆண்டு 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணபிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இதற்கான விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 7 தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவரும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான தகவல்களை அளித்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் இதற்கான கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.