தமிழக மருத்துவர்கள் கவனத்திற்கு.. இந்த அறிவிப்பை நம்ப வேண்டாம் – மா சுப்பிரமணியன்!!

0
292
Attention Tamil Nadu doctors.. Don't believe this announcement - Maa Subramanian!!

தமிழக மருத்துவர்கள் கவனத்திற்கு.. இந்த அறிவிப்பை நம்ப வேண்டாம் – மா சுப்பிரமணியன்!!

மருத்துவர்கள் எழுதி தரும் மருந்து சீட்டுகளில்  உள்ள கையெழுத்தானது பலருக்கும் புரிவதில்லை.குறிப்பாக அந்த கையெழுத்தானது மருந்துகளை எடுத்து தருபவர்களுக்கே ஒரு சில நேரங்களில் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாக உள்ளது.இவ்வாறன புரியாத கையெழுத்தினால் மருந்து மாத்திரைகள் கூட தவறாக எடுத்துக் கொள்ள கூடும்.எனவே தேசிய மருத்துவ கவுன்சிலானது, மருந்து சீட்டுகளில் இனி மருத்துவர்கள் எழுதும் பொழுது கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இதனை எந்த ஒரு மருத்துவரும் சரிவர பின்பற்றவில்லை.இதனையடுத்து தமிழக அரசும் மருத்துவர்கள் கட்டாயம் கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என பல செய்திகள் வெளிவந்தது. இந்த உத்தரவு குறித்து தற்பொழுது சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.அதில், தமிழக சுகாதாரத்துறை சார்பாக மருத்துவர்கள் மருந்து சீட்டுகளில் கட்டாயம் கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என்ற எந்த ஒரு  அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அவ்வாறு வெளிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.அது மட்டுமின்றி  தேசிய மருத்துவ கவுன்சில்தான் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டதே தவிர்த்து தமிழக அரசு இம்மாதிரியான அறிவிப்புகளை வெளியிடவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.கேப்பிட்டல் லெட்டரில் எழுதுவது குறித்த விளக்கத்தை அமைச்சர் தெரிவித்ததையடுத்து மருத்துவர்கள் மீண்டும் தங்கள் கையெழுத்திலே எழுத தான் அதிக வாய்ப்புள்ளது.