Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!!

ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் ஏராளமான விழாக்களுக்காக விடுமுறை அளிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதியில் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, கடையேழு வள்ளல்களில் ஒருவர் தான் வல்வில் ஓரி மன்னர் ஆவார். இவர் வில் வித்தையில் சிறந்து விளங்கியதால், இவரின் சிறப்பை பறைசாற்றும் வகையில்,

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் மாபெரும் விழா ஒன்று நடத்தப்படுவது வழக்கம். இதனை தமிழக அரசு ஒவ்வொரு முறையும் சிறப்பாக நடத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது ஆகஸ்ட் மாதம் வரக்கூடிய இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் இந்த வல்வில் ஓரி மன்னருக்கான விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த மாபெரும் விழாவானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டு மற்றும் மூன்று என்று இரு நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் ஏராளமான பொது மக்களும், தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்த விழாவில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னரின் பெருமைகளை கூறும் விதமாக அமைக்கப்பட உள்ளது.இதனால் விழா நடைபெறுகின்ற பகுதியான நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exit mobile version