cricket : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே 150 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.
இந்திய அணி ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட் பொட்டில் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்திய அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி காப்பாற்றிய இந்திய மானம்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் களமிறங்கியது.
இதில் தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் களமிறங்கினர். ஜெயஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய படிக்கல்லும் டக் அவுட் ஆனார். விராட் கோலி 5 ரன்களிலும், கே எல் ராகுல் 26 ரன்களிலும் ஆட் ஆகினர். படிப்படியாக விக்கெட் விழுந்த நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி ரன் சேர்த்தது.
பின் பண்ட் 37 ரன்களிலும், நிதீஷ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களில் சுருண்டது இந்திய அணி. இதில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.