cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டியில் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா அணி.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது நாளாக 3 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் முக்கிய வீரர்கள் விக்கெட்டை பறிகொடுக்க தொடக்க வீரர் கே எல் ராகுல் விட்டுகொடுக்காமல் விளையாடி வந்தார் பின் ஜடேஜா இணைந்தார் இருவரும் வெகுவாக அணிக்கு ரன் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி 89 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்த நிலையில் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழக்க கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 22 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி டிக்ளேர் செய்துள்ளது.
இந்திய அணி இந்த ரன்னை துரத்தி வெற்றி பெறுமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்க மழை இடையில் அடிக்கடி போட்டியை நிறுத்தி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.