இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் 5 போட்டியில் விளையாட உள்ளது. மேலும் இந்திய அணி முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசானே பேட்டிங் செய்ய 25 வது ஓவரை வீசினார் முகமது சிராஜ்.
சிராஜ் வீசிய முதல் பந்தினை லபுசானே எதிர்கொள்ளாமல் விலகினார். மேலும் இதனை தொடர்ந்து இருவருக்குமிடையில் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் கத்தினார் சிராஜ் ஆனால் சிரித்துக்கொண்டே விலகினார் லபுசானே இதனை தொடர்ந்து சிராஜ் அடுத்த பந்தை வீசினார்.
அடுத்ததாக வீசிய பந்தானது 181 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்தது. இந்த வேகத்தை திரையில் வந்த உடன் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினார்கள். ஆஸ்திரேலிய ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த வேகம் காட்டப்பட்டது என கூறப்பட்டது. இதற்கு முன் பாகிஸ்தான் அணியின் வீரர் சோயப் அக்தர் 161.3 கி மீ வேகத்தில் வீசிய சாதனையாக உள்ளது.