நான் முதல்வன் திட்டத்தின் அசத்தல் அறிவிப்பு!!மாணவர்களுக்கு மாதம்தோறும் 7500 ரூபாய் ஊக்கத்தொகை!!

0
189
Awesome Announcement of Naan Multavan Scheme!!Incentive of Rs 7500 per month for students!!

நான் முதல்வன் திட்டத்தின் அசத்தல் அறிவிப்பு!!மாணவர்களுக்கு மாதம்தோறும் 7500 ரூபாய் ஊக்கத்தொகை!!

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் செய்யப்பட்டு வருகின்றது.தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தரத்தை ஊக்குவிக்கும் விதமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் அவர்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல பயிற்சிகள் மற்றும் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

இந்த நான் முதல்வர் திட்டத்தின் மூலமாக பல கல்லூரி மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த பயிற்சி வகுப்பின் மூலம் மட்டுமே சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இலவச பயிற்சி வகுப்பை பெற்று பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தமிழக அரசு தற்பொழுது இந்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் யுபிஎஸ்சி தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.

மாணவர்களுக்கு உதவித்தொகையாக 7500 ரூபாய் வரை வழங்க உள்ளது.மேலும் தேர்வு எழுதி முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு 25000 ரூபாய் உதவித்தொகை வழங்க உள்ளதாக தமிக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த உதவித்தொகை தமிழக அரசு தகுதியானவர்களை ஆராயிந்து வழங்க உள்ளதாகவும் இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் https://nmcep.tndge.org/apply_now  என்ற இணையதள பக்கத்தில் விண்ணபிக்க வேண்டும் என்று அறிவூர்தப்படுள்ளது . மேலும் மாணவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 17 ஆம் விண்ணபிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.