Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐசிசி வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியல்! கோலிக்கு பின்னடைவு!

ஐசிசி வெளியிட்டிருக்கின்ற ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசைப் பட்டியலில் கேப்டன் விராட் கோலி சரிவை சந்தித்து இருக்கின்றார். நோய்த்தொற்று காரணமாக, குறைவாக நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் தற்சமயம் அதிக அளவில் நடைபெற தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டிருக்கிறது.

பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 158 ரன்கள் சேர்த்தார். இது அவருடைய புள்ளிகள் உயர காரணமாக இருந்தது.

ஒருநாள் தரவரிசை பட்டியலில் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்து வந்த கேப்டன் விராத் கோலி 857 புலிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறார். இவர்களை தவிர்த்து வேறு எந்த ஒரு இந்திய வீரர்களும் முதல் பத்து இடங்களுக்குள் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் நியூசிலாந்து அணியின் வீரர் டிரென்ட் போல்ட் 737 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக வங்கதேச வீரர் மெஹ்தி ஹஸன் 713 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், க்ரிஸ் வோக்ஸ் 711 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இருக்கிறார்கள். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ரிஷப் 690 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு சென்று இருக்கிறார். இவர்களை தவிர்த்து எந்த ஒரு இந்திய பந்து வீச்சாளரும் முதல் 10 இடங்களில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்திய அணிக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர், டி20 உலக கோப்பை என்று அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பதால் ஒருநாள் போட்டி தொடர்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடையாது. அதன் காரணமாக, இந்திய வீரர்கள் ஒருநாள் தரவரிசை பட்டியலில் தொடர்ச்சியாக சரிவைச் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version