Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆசியக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி… பாக். கேப்டன் பாபர் ஆசாமின் கூல் பதில்!

ஆசியக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி… பாக். கேப்டன் பாபர் ஆசாமின் கூல் பதில்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோதுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின.

இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிரது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும், இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும். இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது.

 இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “இந்தியாவுக்கு எதிரான போட்டியும் மற்ற அணிகளுக்கு எதிரான போட்டி போல சாதாராணமான ஒன்றுதான். வழக்கம் போலவே தயாராவோம்” எனக் கூறியுள்ளார். உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் இதுவரை ஒரே ஒரு முறைதான் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version