கில் மோசமான பேட்டிங்கிற்கு இதான் காரணம்.. இதை செய்தால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்!! யுவராஜ் தந்தை அறிவுறுத்தல்!!

0
95
Bad batting by Gill

Cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அண்ணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் சொதப்பி வரும் நிலையில் யுவராஜின் தந்தை அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.

இந்தியா மட்டும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியனின் முக்கிய பேட்ஸ்மேன் சுப்மன் கில் தடுமாறி வருகிறார். இந்நிலையில் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் அவரது பேட்டிங் குறித்து அவருக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது போட்டியில் சமனில் முடிவடைந்துள்ளது.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எழுதிப் போட்டிக்கு செல்ல இந்தத் தொடரில் உள்ள ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. எனினும் ஒரு போட்டியில் வென்றுள்ளது ஒரு போட்டி சமன் செய்துள்ளது. ஆனாலும் இனி வரும் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும்.

இந்நிலையில் இரு அணிகளும் கடுமையான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. நான்காவது போட்டியானது வருகிற 26 ஆம் தேதி மெல்போனில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. எனினும் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஒருவர் சுப்மன் கில் அவர் இந்திய மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியும் வெளிநாடுகளில் தடுமாறியும் வருகிறார்.

இதற்கு யுவராஜ் சிங்கின் தந்தை அறிவுரை கூறுகையில் கில்கிரிட்ஸ் இப்படித்தான் ஒருமுறை தடுமாறி வரும்போது அவர் பின்னங்கையில் அதிக பலத்தை செலுத்தி வந்தார். அதன்பின் அதற்கான பயிற்சியை மேற்கொண்டு அவர் சதம் விலாசினார். தற்போது சுப்மெனிலும் அதே தவறை தான் செய்து வருகிறார். அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வந்தால் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அறிவுரை கூறியுள்ளார்.