ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை!! விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு!!
நேப்பாள நாட்டில் ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமாகி விட்டது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு பகுதிக்கு ஆறு பேருடன் சென்றது.
இதனையடுத்து திடீரென்று ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. இது குறித்து தகவல் கிடைத்த நிலையில், ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இதுவரை இந்த ஹெலிகாப்டர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்படாமல் இருந்தது. ஒருவேளை ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளாகி விட்டதா என்பதையும் தேடி வந்தனர்.
அந்த வகையில் மாயமான ஹெலிகாப்டர் எவரெஸ்ட் சிகரம் அருகில் விபத்திற்கு உள்ளானது. இதனால் அதில் இருந்த ஆறு பெரும் உயிரிழந்து விட்டனர்.
இதனையடுத்து நேபாள அரசு இதற்கான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது, தேவையற்ற ஹெலிகாப்டர் பயணத்திற்கு தடை விதித்துள்ளது.
வருகின்ற செப்டம்பர் மாதம் வரை மலை விமானங்கள், ஸ்லிங் விமானங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற விமானங்கள் ஆகியவற்றிற்கு தடை செய்து நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த விமானங்கள் செல்லக்கூடாது எனப்படும் தடை உத்தரவில் ஹெலிகாப்டர்களும் உட்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செப்டம்பர் மாதம் வரையில் அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படுகிறது.
இந்த முடிவு நேபாளாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தை கருத்தில் கொண்டு அனைவரின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளது என்று நேபாள சிவில் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.