Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை!! தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!!

Ban on smoking room in restaurants!! Tamil Nadu Government Gazette Publication!!

Ban on smoking room in restaurants!! Tamil Nadu Government Gazette Publication!!

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை!! தமிழக அரசு அரசிதழ் வெளியீடு!!

சென்னையில் உள்ள ஹூக்கா பார் திடீரென அதிகமாகி உடலில் ஏராளமான தீங்கினை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இட்ன்ஹா பார்களுக்கு தடை விதித்து மூன்று ஆடுகள் ஜெயில் தண்டனையும் வழங்கி 2022  ல் மசோதா நிறைவேற்றப்பட்டது.

எனவே, தமிழகத்தில் எந்த ஒரு உணவகங்களிலும் ஹூக்கா பார் நடத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி புகைக்குழல் கூடம் நடத்தி வந்தால் மூன்று ஆண்டுகள் நிச்சயமாக சிறை தண்டனை வழங்கப்படும்.

மேலும், இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். இது குறித்து தமிழக அரசு ஒரு அரசிதழை வெளியிட்டுள்ளது. அதன்படி, எந்த ஒரு நபரும் தனக்கு சொந்தமாகவோ, பிற நபரின் சார்பாகவோ,

உணவுக்கூடம் அமைந்திருக்கின்ற எந்த ஒரு பகுதியிலும் புகைக்குழல் கூடம் வைக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசினால் அதிகாரம் அளிக்கப்பட காவல் துறையினர் எவரும் இது போன்ற குற்றங்களை எதிர்த்து கேட்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, புகைக்குழல் கூடத்தில் உட்பொருளாகவோ அல்லது துணை பொருளாகவோ எந்த ஒரு மூலபொருளை பயன்படுத்தி இருந்தாலும் அதை காவல்துறையினர் கைப்பற்றலாம்.

இந்த அறிவிப்பை மீறியும் புகைக்குழல் கூடம் நடத்துபவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும்.

தண்டனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அபராத தொகையாக இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version