இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹாரி புரூக் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் டி20 தொடர் வரும் 22ம் தேதி இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
இதில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர், ஹாரி புரூக் ரூ. 6.25 கோடிக்கு வாங்கப்பட்டார்.
ஆனால், கடந்த சில தொடர்களில் புரூக்கின் ஆட்டம் அந்த அளவிற்கு பெரிதாக இல்லை. இதனால் கடும் விரக்தி அடைந்த அவர் இங்கிலாந்து அணி விளையாடும் தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக, ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த திடீர் அறிவிப்பு டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகத்திற்கு(DC) அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐபிஎல் புதிய நடைமுறை விதிப்படி ஒரு வீரர் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டால் அவர் கட்டாயம் அந்த அணியில் இருக்க வேண்டும்.
காயம் மற்றும் குடும்ப சூழ்நிலை கொண்ட காரணங்களை தவிர வேறு காரணத்தை சொல்லி ஐபிஎல் தொடர் விளையாட மறுத்தால், அவர்களுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படும். இதனால் புரூக்கிற்கு அடுத்த 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.