Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரலாற்று சாதனை படைத்த வங்காளதேசம்! பரிதாபத்தில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. முதலிரண்டு போட்டிகளையும் பங்களாதேசம் வெற்றி பெற்று விட்டது. இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி நேற்றைய தினம் நடந்தது டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதனடிப்படையில் வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை சேர்த்தது அந்த அணியின் கேப்டன் அதிகபட்சமாக 52 ரன்களை சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியின் சார்பாக நாதன் 3 விக்கெட்டுகளும் ஹேசில் சில்வுட் சாம்பா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து 128 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் புகுந்தது. இருந்தாலும் வங்காளதேச அணியினர் மிகத்துல்லியமாக பந்துவீச்சு செய்து பலமான ஆஸ்திரேலிய அணியை திணறடித்த கேப்டன் வேட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

மெக்டோ மெட்டுடன் இணைந்த மிட்செல் மார்ஷ் 63 ரன்கள் எடுத்தார்.மெக்டோ மெட் 35 ரன்னில் அவுட்டானார் மிட்சல் மார்ஷ் அரைசதம் அடித்து 51 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹேன்றிக்ஸ் 2 ரன்னில் நடையைக்கட்டினார்.

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு கடைசி நான்கு அவர்களை 38 ரன்கள் தேவைப்பட்டது 17வது ஓவரில் 4 ரன்னிலும் 18-வது ஓவரில் 11 ரன்கள் 19வது ஓவரில் ஒரு ரன்னும் கடைசி ஓவரில் 11 மொத்தமாக 27 ரன்கள் எடுத்தார்கள்.கடைசியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றியை அடைந்தது.

அதோடு டி20 தொடரையும் கைப்பற்றி இருக்கிறது ஆட்டநாயகன் விருது மக்மதுல்லா அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. வங்காளதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை முதல் முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version