Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா?

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா?

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வென்றுள்ளதால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரச்சி அளித்துள்ளது

வங்கதேசம் என்ற சின்ன அணிக்கு எதிரான போட்டி என்பதால் விராத் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதேபோல் முன்னணி பந்துவீச்சாளர்களான பும்ரா, புவனேஷ்குமார், குல்தீப் யாதவ் ஆகியோர்களும் அணியில் இல்லை. இந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை ஒன்பது டி20 போட்டிகளில் மோதியுள்ளன. தொடர்ந்து 8 போட்டிகளில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தி வந்த நிலையில் தற்போது முதல் தோல்வி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்:

இந்தியா: 148/6 20 ஓவர்கள்

தவான்: 41
ரிஷப் பண்ட்: 27
ஸ்ரேயாஸ் ஐயர்: 22

வங்கதேசம்: 154/3 19.3 ஓவரகள்

முசாஃபிகுர் ரஹிம்: 60
சொளம்யா சர்கார்: 39
முகமது நயிம்: 26

ஆட்டநாயகன்: ரஹிம்

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி நவம்பர் 9ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version