Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு புது கொள்கை முடிவை எடுத்து அறிவித்துள்ளது. அதன் படி இனி ஆண் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அக்டோபர் 27, வியாழன் அன்று அவர்களது ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஊதிய இடைவெளியை தற்போது தகர்த்துள்ளது. “இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்பின் படி ஒப்பந்தம் செய்துள்ள மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய சமபங்கு கொள்கையை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவு இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் எவ்வளவு தூரம் வந்துள்ளது என்பதன் பிரதிபலிப்பாகும், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் 2020 மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, 2022 இல் ஆசியக் கோப்பையை வென்றது மற்றும் தொடக்க காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணி. என்ற பெருமையை பெற்ற இந்திய மகளிர் அணிக்கு மகிழ்ச்சியையும், கௌரவத்தையும் கொடுத்துள்ளது. கிரேடு சியில் ஆண் கிரிக்கெட் வீரர் பெறுவதை விட பாதியாக இருந்த 50 லட்சம் ரூபாய் ஒரு வருடத்திற்கு பெற்ற பெண் வீரர்களுக்கும் இது ஒரு நிம்மதியாக இருக்கும்.

ஜெய் ஷா அறிவித்தபடி, ஒரு பெண் வீராங்கனை ஒரு போட்டிக்கு ஆண் வீரர் பெறுவதற்கு இணையான தொகை – ஒரு டெஸ்டில் ரூ 15 லட்சம், ஒரு ஒருநாள் போட்டியில் ரூ 6 லட்சம் மற்றும் T20I இல் ரூ 3 லட்சம். இது பெண் வீரர்களுக்கு ஒரு பெரிய மேம்படுத்தலாகும், ஏனெனில் அவர்கள் சுமார் 20,000 ரூபாய் (1500 சதவீதம் அதிகரிப்பு) பெற்றுவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version