இந்தியா ஏ அணி-ஆஸ்திரேலியா ஏ அணியுடன் தொடங்கிய ஆட்டத்தில் வெறும் 11 ரன்களுக்கு நான்கு முக்கிய வீரர்கள் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ போட்ட திட்டத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இந்த போட்டி நவம்பர் 22 ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய ஏ அணி மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணி பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் முதல் பந்தில் டக் அவுட் ஆனார், அடுத்து கே எல் ராகுல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ருதுராஜ் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்திய ஏ அணி.
ரோஹித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத போது அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே எல் ராகுல் இருவரில் ஒருவரை களமிறக்க திட்டமிட்டிருந்தது. தற்போது இருவரும் சொதப்பி வரும் நிலையில் பிசிசிஐ சோகத்தில் ஆழ்ந்துள்ளது.