Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதிய பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் நியமனம்… வெளியான அறிவிப்பு!

புதிய பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் நியமனம்… வெளியான அறிவிப்பு!

பிசிசிஐ தலைவராக கடந்த சில ஆண்டுகள் இருந்த கங்குலி மீண்டும் ஒருமுறை தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே அவர் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டது.

அதன் படி அவர் பிசிசிஐ தலைவராக தொடரப் போவதில்லை என சமீபத்தில் அறிவித்தார்.  சமீபத்தில் அவர் பிசிசிஐ தலைவராக தொடர்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அது உச்ச நீதிமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டது. இதனால் அவர் மீண்டும் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கங்குலியின் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படாமல் ரோஜர் பின்னி அந்த பதவிக்கு நியமிக்கப் படவுள்ளார். இந்நிலையில் கங்குலி ஐசிசி சேர்மன் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இன்று செயற்குழு உறுப்பினர்களால் ரோஜர் பின்னி புதிய பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் வெற்றிகரமான 1983 வேர்ட் கோப்பை பிரச்சாரத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ரோஜர் பின்னி, செவ்வாய்க்கிழமை மும்பையில் நடந்த வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 36வது தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதிலாக பின்னி நியமிக்கப்பட்டார், போர்டு தலைவராக இருந்த அவரது மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. கங்குலி இப்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் உயர் பதவிக்கு போட்டியிடுவார்.

Exit mobile version