Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Gpay மூலம் பலே திருட்டு உங்க அக்கவுண்ட்க்கு இப்படி பணம் வந்தால் உஷார்! ஆசையைக் காட்டி விபூதி அடிக்கும் கும்பல்!!

#image_title

Gpay மூலம் பலே திருட்டு உங்க அக்கவுண்ட்க்கு இப்படி பணம் வந்தால் உஷார்! ஆசையைக் காட்டி விபூதி அடிக்கும் கும்பல்!!

கோவில்பட்டியில் பர்னிச்சர் கடை வைத்திருக்கும் நபருக்கு தொலைபேசியின் மூலம் காஷ்மீர் ஆர்மி மேன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில்  உங்கள் கடையில் நான் சோபா பெட் வாங்க உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

அதற்கு அந்த கடைக்காரர் இந்தியாவில் எவ்வளவு கடை இருக்கிறது. ஆனால் இந்த கடையில் ஏன் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆர்மி மேன் எனக்கு சாத்தூரில் நண்பர் இருப்பதாகவும் அவருக்கு நான் இதனை பரிசளிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதனை நம்பி பொருட்களை நாங்கள் செய்துவிட்டோம் நீங்கள் எனக்கு பணம் அனுப்பினால் போதும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த ஆர்மி மேன் நான் உங்கள்  வங்கியில் கணக்கில் பணத்தை செலுத்துகிறேன் உங்கள் வங்கி எண்ணை கூறுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அந்த கடைக்காரர் தன் மகனின் gpa தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளார். அதில் gpay வசதி உள்ளதாகவும் அதற்கு பணத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.  இதற்கு அடுத்து ஆர்மி மேன் முதலில் ஒரு ரூபாய் அனுப்பி விட்டேன்  வந்திருக்கான்னு பார்த்து சொல்லுங்க சொல்லி இருக்கிறார்.

கடைக்காரரின் மகன் பணம் வந்துள்ளது என கூறியவுடன் மீண்டும் ஆர்மி மேன் இடமிருந்து ஒரு நோட்டிபிகேஷன் வந்துள்ளது அதில் 65 ஆயிரம் ரூபாய் பணம் என்று இருந்ததால் அதனை அவன் கிளிக் செய்துள்ளான்  செய்ததும் 65 ஆயிரம் ரூபாய் அக்கவுண்ட் கணக்கில் வராமல் ஆர்மி மேன் அக்கவுண்டிற்கு 65 ஆயிரம் ரூபாய் சென்றுள்ளது.

மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பணம் எனக்கு வரவில்லை என்னுடைய அக்கவுண்டில் இருந்து உங்களுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு அந்த ஆர்மி மேன் மீண்டும் 30, 35 ஆயிரம் ரூபாய் தனித்தனியாக அனுப்பி  உள்ளேன் என்று கூறினார்.

அதனையடுத்து கடைக்காரரின் மகன் மீண்டும் அதனை கிளிக் செய்யும்போது அவர் தந்தை தடுத்து இதனைப் பற்றிய போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற திருட்டுக்கள் தற்போது நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்கள். தமிழ்நாடு போலீஸ் கடந்த மாதம் அறிவித்த அறிவிப்பில் gpay மூலம் புதிய திருட்டு அரங்கேறி வருகிறது.

உங்களுக்கு நான் தெரியாமல் பணம் அனுப்பி விட்டேன் அதனை திருப்பி அனுப்புங்கள் என்று கூறி சில பேர் திருட்டில் ஈடுபடுகிறார்கள். Gpay பண்ணுவதன் மூலம் பலமுறை  வேறு அக்கவுண்டிற்கு செல்லாமல்  பாதியில் நின்று விடும்.

இது மாதிரி ஏற்பட்டால் உடனே கஸ்டமர் கேருக்கு கால் செய்து புகார் செய்தோம் என்றால் 7 நாட்களில் பணம் திரும்ப பெறப்படும். இந்த தகவலை அனைவரிடமும் பகிர்ந்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது

Exit mobile version