Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம் கார்டு வாங்கும்போது கவனமாக இருங்கள் சைபர் கிரைம் எச்சரிக்கை!! இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

#image_title

சிம் கார்டு வாங்கும்போது கவனமாக இருங்கள் சைபர் கிரைம் எச்சரிக்கை!! இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

நாம் சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால் ஆதார் கார்டு அல்லது உங்களின் முழு விவரங்கள் தெரிவித்து வாங்கிக் கொள்ளலாம். ஆதார் கார்டு கொடுக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக புகைப்படம் கைரேகை வைத்து சிம்கார்டு வாங்கிக் கொள்ளலாம். தற்போது வந்த தகவலின் படி தங்களின் பெயரில் ஆதார் கார்டும் கைரேகை இல்லாமல் எப்படி சிம் கார்டு வாங்குவதை என்று பார்க்கலாம். தற்போது எல்லாம்  சிம்கார்டு வாங்கும் போது கை ரேகை வைத்தால் கைரேகை சரியாக இல்லை என்று இரண்டு முறை வைப்பார்கள். மேலும் புகைப்படம் எடுத்தாலும் புகைப்படம் சரியாக வரவில்லை என்று இன்னொரு முறை எடுப்பார்கள். இதனை வைத்து வேறு நபருக்கு உங்களது பெயரில் சிம் கார்டுகளை கொடுத்து விடுவார்கள். இது போன்ற குற்றங்கள் தற்போது அரங்கேறி வருகிறது. நீங்கள் சிம் கார்டு வாங்கும் போது புகைப்படம் சரியாக இல்லை என்று சொன்னார்கள் என்றால் அதனை நீங்கள் ஒரு முறை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் செய்யவில்லை என்றால் உங்கள் பெயரில் வேறு நபருக்கு சிம் கார்டுகளை விற்று விடுவார்கள். அதனை தவறான செயலுக்கு பயன்படுத்துவார்கள். தற்போது சைபர் காவலர்கள் மக்களுக்கு தேவையான பல தகவல்களை கொடுத்து வருகிறார்கள். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை சைபர் க்ரைம் போலீஸ் அளித்து வருகின்றனர்.
அந்த விழிப்புணர்வில் அரசு ஹெல்ப் லைன் நம்பர் மற்றும் விழிப்புணர்வு வீடியோ போன்றவைகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிம் வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சைபர் போலீஸ் கேட்டு கொண்டு உள்ளார்கள்.

Exit mobile version