பாரதிராஜா என்னை நடிக்க விடவில்லை!! நகைச்சுவை நடிகரின் உருக்கமான பேச்சு!!
தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திய ஒரு நகைச்சுவை நடிகர் தான் தியாகு ஆவார். இவருடைய முதல் திரைப்படம் ஒரு தலை ராகம் ஆகும்.
இவர் நடித்த பாலைவன சோலை என்னும் திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இவர் பல திரைப்படங்களில் ஹீரோவின் நண்பராகவும், குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் அரசியல்வாதியாகவும், ஜாதி சங்க தலைவராகவும் நடித்திருக்கிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறி இருப்பதாவது,
கமலின் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த காதலா காதலா என்னும் திரைப்படத்தில் டெல்லி கணேஷிற்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரம் முதலில் எனக்குத்தான் வந்தது.
உலக நாயகன் கமல் ஹாசனுடன் நடிக்க நான் ஆர்வமாக இருந்தேன். அந்த படத்திற்காக அட்வான்ஸ் தொகை முதற்கொண்டு வாங்கி விட்டேன். அடுத்தநாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் இதற்கான படப்பிடிப்பு என்று கூறி இருந்தனர்.
ஆனால் அப்பொழுது திடீரென இயக்குநர் செல்வமணியும், பாரதிராஜாவும் நீ அந்த படத்தில் நடிக்க கூடாது என்று கூறி விட்டனர். இதை கமலிடம் நேரில் சென்று கூறி வருகிறேன் என்று சொன்னேன். ஆனால் இவர்கள் இருவரும் என்னை போகவே விடவில்லை.
இதற்கு காரணம் காதலா காதலா திரைப்படம் எடுக்கும் போது திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கும், இயக்குனர் சங்கத்திற்கும் பிரச்சனை நிலவி கொண்டு இருந்தது.
இதில், கமல் ஹாசன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்தார். இதனாலேயே இயக்குனர் பாரதிராஜா கமல் படத்தில் நடிக்க கூடாது என்று தியாகு-வுக்கு உத்தரவு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர்கள் கூறியதையும் மீறி நான் கமலிடம் சென்று நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறினேன். அவர் உடனடியாக பேக்கப் என்று சொல்லி சென்று விட்டார்.
இதன் பிறகுதான் எனக்கு பதிலாக டெல்லி கணேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படமும் வெற்றி வாகையை சூடியது என்று பேட்டியில் கூறி உள்ளார்.