இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் நடுவே ஆஸ்திரேலியா ஊடகத்தினர் ஜடேஜா பேசும் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தனர். இது தற்போது ஒரு புதிய சர்ச்சையாக எழுந்துள்ளது.
இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து உடனான படுதோல்வி சந்தித்த பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல ஆசிரியருடன் விளையாட உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நான்கு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் களமிறங்கிய இந்திய அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்தது. இந்த மூன்றாவது போட்டியில் முடிஞ்ச பிறகு நடைபெற்று வந்த வலை பயிற்சியின் போது ஜடேஜா ஊடகத்தினரை சந்தித்தார். அந்த சந்திப்பில் பல ஆஸ்திரேலியா ஊடகத்தினர் சந்திப்பை புறக்கணித்தனர். அதற்கு காரணமாக அந்த ஊடகத்தினர் ஜடேஜா ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை அதனால் தாங்கள் அந்த சந்திப்பை விட்டு வெளியேறினோம் என்று பதில் அளித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்த இந்திய ஊடகத்தினர். இந்தியா ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனால் இந்திய ஊடகத்தினருக்கும் ஆஸ்திரேலியா ஊடகத்தினற்கும் இடையே நடைபெற இருந்த கண்காட்சி டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா ஊடகத்தினர் வீணாக இந்திய வீரர்கள் மீது குற்றம் சுத்துவதாக இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.