இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல்..3 வது போட்டியில் விழுந்த இடி!! அதற்கான காரணம் என்ன??

0
130
Big problem for Indian team

cricket : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டியில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே 2 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழலில் உள்ளது. அதனால் இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அஸ்வின்,ஜடேஜா ஆகிய மூத்த வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொள்ள பட்டு வருகின்றனர்.

இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்த பிறகு புள்ளி பட்டியலில் புள்ளிகள் குறைந்தது. ஆஸ்திரேலியா உடன் 2வது போட்டியில் தோல்வியடைந்ததால் இன்னும் குறைந்து புள்ளி பட்டியலில் 3 வது இடத்திற்கு சென்றுள்ளது. புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ளவர்கள் இறுதி போட்டிக்கு செல்ல முடியும்.

இதனால் இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஒரு போட்டி கூட டிரா செய்யாமல் வெல்ல வேண்டும். ஆனால் இதில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது 3 வது போட்டி நடைபெறும் பிரிஸ்போன் மைதானத்தில் போட்டி நடைபெறும் 5 நாட்களும் மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 3 வது போட்டி ரத்தாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் க்கு முன்னேற பின்னடைவாக இருக்கும்.