குறி வைத்து தாக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை!! அதிமுகவின் நிலை என்ன??
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஒரே கூட்டணியாக இருந்த அதிமுகவும், பாஜக வும் சில நாட்களாக நட்பு இல்லாமல் இருக்கின்றனர்.
இதற்கு பாஜக தலைவராக அண்ணாமலை பணியமர்த்தப்பட்டது தான் காரணம் என்று அனைவரும் குற்றம் கூறி வருகின்றனர். அந்த வகையில், தற்போது டெல்லியில் நடைபெற இருக்கின்ற தேசிய ஜனநாயக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.
பாஜக வுக்கு அடுத்து அங்கு பெரிய கட்சியாக வலம் வருவது அதிமுக தான். ஆனால் அண்ணாமலை தன்னை தானே பெருமைப்படுத்திக் கொண்டு எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறி வருகிறார்.
அதிமுகவின் துணை இல்லாமல் எதுவுமே இங்கு செல்லாது. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை தான் வைத்தது தான் சட்டம் என்று கூறி வருவதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பாஜக தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலத்தில் கண்டிப்பாக குறைந்தது நான்கு தொகுதிகளாவது வேண்டும் என்று கங்காணம் கட்டிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கொங்கு மண்டலங்களை பொறுத்த வரை எப்போதுமே அங்கு அதிமுக ஆட்சி தான். எனவே, கொங்கு மண்டலங்களை பாஜக விற்கு தருவதற்கு அதிமுக துளியும் விரும்பவில்லை.
அதிமுக வலிமை பெற்று இருக்கும் பகுதிகளை பாஜக விற்கு தந்துவிட்டு என்ன செய்வது என்று எடப்பாடி கொந்தளித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது டெல்லியில் நடக்கின்ற ஆலோசனைக் கூட்டத்தில், எந்த இடங்கள் ஒதுக்குவது, எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது குறித்து அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே தீ பற்றிக்கொள்ளும் என்றும் அனைவரும் கூறி வருகின்றனர்.