Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திறனற்ற திமுக அரசின் துணையுடன் மணல் கொள்ளையர்களால் கொள்ளிடத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! அண்ணாமலை கடும் ஆவேசம்!

தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா ஆலயத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் சிலுவை பட்டியைச் சார்ந்த 40 பேர் சுற்றுலா வந்தனர். அவர்களில் சிலர் பூண்டி தென்கரை பாலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். அவர்களில் சார்லஸ், பிரவீன்ராஜ், பிரித்விராஜ், தாவீத், ஈஷாக், தர்மாஸ் ஒரு லிட்டர் 6 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிகள் சென்றுள்ளனர்.

நீச்சல் தெரியாத காரணத்தால் இவர்கள் அனைவரும் நேரில் மூழ்கியுள்ளனர் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நீரில் சிக்கிய உடல்களை மீட்டனர். இன்று காலை வரையில் 5 பேரின் உடல்களை வைத்த தீயணைப்புத் துறையைச் சார்ந்தவர்கள் மேலும் ஒருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுற்றுலாவிற்கு வந்த இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு பேர் மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் மூழ்கி மாயமானதாகவும், அதில் இதுவரையில் மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது திறமையற்ற திமுக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் மணல் கொள்ளையால் உண்டான முதல் உயிரிழப்பு இல்லை என்று தெரிவித்துள்ள அவர்,

ஜூன் மாதத்தில் கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் நீராடுவதற்காக சென்ற 7 பேர் மணல் கொள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்ட பள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளதாகவும், தொடர்ச்சியாக இது போன்ற உயிரிழப்புகளுக்கு இந்த திறனற்ற திமுக அரசே பொறுப்பு என்று அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார்.

Exit mobile version