வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!!
நாட்டின் பல்வேறு இடங்களில் தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது.அந்த வகையில் இந்தியாவில் டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை அன்று மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, எந்த ஒரு முன்னேச்சரிக்கையும் இல்லாமல், 153 மி.மீ. அளவு மழை பதிவாகி உள்ளது.
இதனால் டெல்லியில் வசிப்போருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுப்போன்ற மழைப்பொழிவு 1982 ஆம் ஆண்டு ஜூலைக்கு பிறகு இப்பொழுது தான் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் இருக்கக்கூடிய கார்யூக் பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது.
இங்கு நேற்று மாலையில் பொழிந்த கனமழையால் 450 ஆண்டுகால பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனுடன் சில வீடுகள் பாதிப்படைந்து உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஹைதர் என்பவர் கூறியதாவது, கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட மேகவெடிப்பின் போது கூட இந்த கட்டிடம் இடியவில்லை.
ஆனால் இந்த கனமழையால் இது இடிந்து விட்டது என்றும் மேலும் இந்த கட்டிடமானது 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் என்றும் கூறி உள்ளார்.
மேலும், கடந்த ஒன்பது மணி நேரத்தில் இங்கு 14.5 மி.மீ அளவு மழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாக அந்த நபர் தெரிவித்தார்.