Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்!

தோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்!

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நேற்று முன்தினம் விலகினார். இதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தோனியை போன்ற கேப்டனை பெற சென்னை அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதே நேரத்தில் தோனிக்கு சென்னை ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அன்பு மகத்தானது என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் சென்னை அணியில் விளையாடியது குறித்தும், அதில் தோனியின் தலைமைத்துவம் குறித்தும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக பல வருடங்களாக விளையாடி வந்தவரும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான பாப் டு பிளஸ்சிஸ் கூறுகையில்,

நான் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தோனி தலைமையின் கீழ் பல வருடங்களாக விளையாடி உள்ளேன். அதன் மூலம் அவரிடம் நிறைய நல்ல விஷயங்கள் இருப்பதை நான் அறிந்து வைத்துள்ளேன். களத்தில் இக்கட்டான சூழலில் தோனியின் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை என்னால் நெருக்கமாக இருந்து காண முடிந்தது. எனவே தோனியின் தலைமையின் கீழ் நான் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version