Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்கள் இருவரும் உலக கோப்பையை வென்று தருவார்கள்! சச்சின் நம்பிக்கை! யார் அவர்கள்?

இவர்கள் இருவரும் உலக கோப்பையை வென்று தருவார்கள்! சச்சின் நம்பிக்கை! யார் அவர்கள்?

விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ரவிசாஸ்திரியின் பதவி காலமும் முடிவடைந்ததை தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டி மற்றும் அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளார்கள். அதற்காக தற்போதிருந்தே போட்டியை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர்  அளித்துள்ள பேட்டியில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நாம் உலககோப்பையை வென்று 11 ஆண்டுகள் நிறைவடைகிறது. அடுத்த உலக கோப்பைக்காக நீண்ட காலம் காத்திருக்கிறோம். நான் உள்பட அனைவரும் இந்தியா மீண்டும் ஒரு உலக கோப்பையை வெல்வதை பார்க்க விரும்புகிறோம்.

எல்லா கிரிக்கெட் வீரர்களும் இந்த கோப்பைக்காகத் தான் விளையாடுகிறார்கள். உலககோப்பையை விட பெரிதானது ஒன்றுமில்லை. அது 20 ஓவராக இருந்தாலும் சரி, 50 ஓவராக இருந்தாலும் சரி உலக கோப்பை எப்போதும் சிறப்பு வாய்ந்தது தான். அப்படித்தான் நான் உணருகிறேன். ரோகித் சர்மா – டிராவிட் ஒரு அற்புதமான ஜோடி. இவர்கள் இருவரும் சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள்.

இந்த பயணத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு டிராவிட்டிடம் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல் இருப்பது முக்கியமான ஒன்று. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து முன்னேறுவோம். இந்த கூட்டணி உலக கோப்பையை வென்று தரும் என நான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

Exit mobile version