Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓய்வை அறிவித்த பிராவோ.. ஆனால் பயிற்சியாளராக தொடர்வேன்

ஓய்வை அறிவித்த பிராவோ.. ஆனால் பயிற்சியாளராக தொடர்வேன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது 39 வயதாகும் டுவைன் பிராவோ அடுத்த ஐபில் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்டார். அணியின் முதுகெலும்பான செயல்பட அவரை ரசிகர் கொண்டாடினர். சென்னை அணியின் முக்கிய வீராக செயல்பட்ட அவர் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

மேலும், கூடவே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், மிக கடினாமான டி20 போட்டியில் 15 ஆண்டுகள் விளையாடிய பிறகு தாம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்றும், இது ஒரு சிறப்பான பயணம். நிறைய ஏற்றதாழ்வுகளுடன் இருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல்லின் அங்கமான இருந்ததாகவும், தனக்கும், தனது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் இன்று ஒரு சோகமான நாள் என்பதை தாம் அறிவதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், பயிற்சியாளர் தொப்பியை அணிய ஆவலுடன் காத்திருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்க விரும்புவாதாகவும், அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Exit mobile version