Breaking: வேலைக்கு வராத நாட்கள் அனைத்தும் பணி நாட்கள் தான்!! தமிழக அரசின் அசத்தல் அரசாணை!!
கொரோனா தொற்றால் சீனா என தொடங்கி இந்தியா முதல் பல நாடுகள் உயிரிழப்புகளை சந்தித்த வண்ணமே இருந்ததால் இதற்கு முதலில் எந்த தடுப்பூசியும் வரவில்லை. எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டி அனைத்து அரசாங்கமும் ஊரடங்கு அறிவித்திருந்தது.
அவசரநிலை அரசு ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்த நிலையில் மற்ற அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த கொரோனா ஊரடங்கானது 3 ஆண்டுகள் தொடர்ந்த நிலையில் இவ்வாறான நிலைப்பாடு காணப்பட்டது.
கொரோனா ஊரடங்கு முடிந்து மீண்டும் அனைத்து துறைகளும் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில், கொரோனா ஊரடங்கில் கொடுக்கப்பட்ட விடுமுறையை சிறப்பு விடுப்பாக அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தற்பொழுது தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.அதில்,
அந்த அரசாணையில், 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை சிறப்பு விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.