ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. ஏனெனில் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டியில் வெற்றி பெற்றால் வாய்ப்பு என்ற நிலையில் இருந்தது.
இந்திய அணி தற்போது நடைபெற்று முடிந்த 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட்டார். இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி சிறந்த 2024 ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் ப்ளையிங் லெவனை வெளியிட்டது. அந்த அணியில் சிறந்த வீரர்களில் கேப்டனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஜெயஷ்வால்,டக்கெட், ஜோ ரூட், ரச்சின் ரவீந்திரா, ஹாரி ப்ரூக், கமிந்து மென்டிஸ், அலக்ஸ் கேரி, மேட் ஹென்றி, ஹேசில்வுட், கேஷவ் மகராஜ் ஆகியோர் அந்த அணியின் ப்ளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளனர். இதில் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.