Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளை மறுநாள் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டி! சாதனை படைப்பாரா பும்ரா!

இங்கிலாந்திற்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக, டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி அடைந்தது.

இந்தப் போட்டியில் பும்ரா மற்றும் சமி ஆகிய இருவரும் மிகவும் சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அசத்தினார்கள். இதன் காரணமாக, எதிர்வரும் 25ஆம் தேதி ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இதுவரையில் இருபத்தி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தொண்ணூற்று ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார். இதற்கு மாறாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி விட்டால் குறைந்த தொடர் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை செய்து முடிப்பார். ஏற்கனவே மனோஜ் பிரபாகர், வெங்கடேஷ் பிரசாத், உள்ளிட்டோரின் சாதனைகளை முறியடித்து விட்டு பும்ரா சாதனையை உடைக்க காத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version