இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளில் ஏற்கனவே 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் இந்திய அணியும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியானது சமனில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதல் போட்டியில் அபாரமாக விக்கெட்டுகளை வீழ்த்திய பின் பல ஆஸ்திரேலியா ரசிகர்கள் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வல்லுனர்கள் என அனைவரும் பும்ரா பந்து வீச்சு தவறானது தடை செய்ய வேண்டும் என கூறிவந்த நிலையில் தற்போது அது அடங்கியது.
ஆனால் மீண்டும் தொடங்கியது அந்த சர்ச்சை பேச்சு ஆஸ்திரேலியாவின் வர்ணனையாளர் இயன் மவுரிஸ் கிளப்பியுள்ளார். அவர் கூறுகையில் பும்ரா பந்துவீச்சை உற்று நோக்க வேண்டும் அவர் எறிகிறார் என்று நான் கூறவில்லை ஆனால் அவர் வீசும் முறையை நன்கு கண்காணிக்க வேண்டும். உடனே என் மீது கொந்தளிக்கதிர்ககள் நான் சொன்னதை சற்று கவனித்து பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பும்ராவின் மனநிலையை குலைக்க இவ்வாறு செய்கிறார்கள் என கூறி வருகின்றனர்.