cricket: இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா பந்து வீச்சை தடை செய்ய வேண்டும் என்று கதறும் ஆஸ்திரேலிய ரசிகர்கள்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் நாள் இன்னிங்ஸில் 4 விக்கெட் எடுத்திருந்த நிலையில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் 1 விக்கெட் எடுத்து 5 விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். இதனால் பும்ராவின் பந்து வீச்சு விதிகளுக்கு புறம்பாக உள்ளது என ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூட்டம் கிளம்பியுள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்ள மாட்டார் என்ற நிலையில் இந்த முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. கேப்டன் பும்ரா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இரண்டாவது நாளாக இன்று தொடங்கிய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்நிலையில் பும்ரா பந்து வீசுவது விதிகளுக்கு மாறாக உள்ளது. அவரை தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இவர் அதிக விக்கெட் வீழ்த்துவதால் தான் இவ்வாறு கூறி வருகின்றனர் என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.