இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் 4 போட்டிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. நடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் தகுதியை இழக்கும்.
நான்காவது போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் மீண்டும் பலன் ஏதுமின்றி சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்கிறார். நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் 6 இன்னிங்ஸில் விளையாடி 92 ரன்கள் அடித்தார். அதுபோலவே இந்த தொடரிலும் இதுவரை 5 இன்னிங்ஸில் விளையாடி 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் 4 வது போட்டிக்கு பின் இவர் இப்போது ஓய்வு பெறுவார் என கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியில் இருந்து 5 வது போட்டியில் ரோஹித் சர்மா விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொடருக்கு பின் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது. மேலும் இவருக்கு பதிலாக முதல் போட்டியை போலவே பும்ரா மீண்டும் கேப்டனாக களமிறங்குவார். தொடக்க வீரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் கே எல் ராகுல் கலமிரங்க்வுள்ளதகவும் கில் 3 வது வரிசையில் விளையாடுவார் எனவும் கூறப்படு வருகிறது. இதனால் இந்திய அணி 5 வது போட்டியில் வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.