Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி!! பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்!!

BV Sindhu lost to Jia Min of Singapore in the International Badminton Tournament

BV Sindhu lost to Jia Min of Singapore in the International Badminton Tournament

PV Sindhu:சீனாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சிங்கப்பூர் ஜியா மினிடம் தோல்வியை தழுவியுள்ளார்.

இந்திய பேட்மிண்டன் உலகில்  ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் மற்றும் ஒரே நபர்  பி.வி.சிந்து தான். இவர் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல உலகளாவிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். இந்தியாவில் பிரபலமாக அறியப்பட்ட பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவர் பி.வி.சிந்து.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது 14வது வயதில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். இன்று வரை இந்தியாவின் சார்பாக சர்வதேச விளையாட்டுகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் 2024 ஆண்டு ஆசியா டீம் போட்டியில் காயம் அடைந்தார். அதன் பிறகு சிறிது காலம் ஓய்வு பெற்ற இவர் தற்போது சீன மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டார்.

இந்த போட்டியானது ஷென்ஜென் நகரில் நடைபெற்றது.  இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டார் இந்த போட்டியில் சிங்கப்பூர் ஜியா மின் இவருடன் போட்டியில் கலந்து கொண்டார். இரண்டு சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்று இன்று நடைபெற்றது. இதில் இரண்டாவது சுற்றில் இந்திய போட்டியாளர் பி.வி.சிந்து சிங்கப்பூர் ஜியா மினிடம் தோல்வியை தழுவியுள்ளார்.

இதனால் சீனாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது.

Exit mobile version