Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

#image_title

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில் இன்று அமைச்சரவை கூடுவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறவுள்ளது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம் பெறவுள்ளது.

பொது பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றிய ஆலோசனையை அமைச்சரவை மேற்கொள்ள உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.

Exit mobile version