பாகற்காய் ரொம்ப நல்லது தான்! ஆனால் எக்காரணம் கொண்டும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!!
பாகற்காய் மிகவும் கசப்பாக இருந்தாலும், பல்வேறு அற்புத மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
ஆனால், பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாகற்காயில் இருக்கும், கசப்பு சுவை கருதி பெரும்பாலானோர், தங்கள் உணவில் சேர்த்து கொள்வதில்லை, ஆனால் இதில் பல்வேறு மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
இவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது.
ஆனால் பாகற்காயை குறிப்பிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சிலர் அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப குறிப்பிட்ட சிலர் பாகற்காயை தினமும் உட்கொள்வது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. எனவே, பாகற்காயை சாப்பிடும் போது யாரெல்லாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குறைந்த சர்க்கரை அளவு கொண்டவர்கள்:
பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது. இது உங்கள் சர்க்கரை அளவை மேலும் குறைக்கலாம்.
கல்லீரல் பாதிப்பு
நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பது சரிதான். ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மறுபுறம், உங்களுக்கு கல்லீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், பாகற்காய் தொடவே கூடாது.
சீரற்ற இதய பாதிப்பு:
பாகற்காய் அதிக அளவில் சாப்பிடுவதால் இதயத்தில் ரத்த ஓட்டம் ஒரு புறமே செல்லும். இதனால் இரத்த கட்டிகள் மார்பில் உருவாகி மாரடைப்பு அல்லது பக்க வாதத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அளவிற்கு அதிகாம சாப்பிடும் போது, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, சீறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கர்ப்பிணி பெண்கள்:
பாகற்காய் சாறு அதிகம் உட்கொள்வதால், பெண்களுக்கு நீர்க்கட்டி பிரச்சனைகளை தீர்த்து மாதவிடாய் சுழற்சி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், கர்ப்ப காலத்தில் நீண்ட நாட்களாக அதிக அளவில் பாகற்காய் சாப்பிட்டால் கருசிதைவு, உண்டாகும். எனவே கருவுற்ற பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் பாகற்காய் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.