Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!

கேப்டன் கூல் தோனியின் பிறந்தநாள்! 77 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்!!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீவர ரசிகர் ஒருவர் 77 அடி உயரம் கொண்ட எம்.எஸ் தோனியின் கட்-அவுட்டை வைத்து அசத்தியுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் அதிரடி பினிஷராகவும் விளையாடிவந்தவர் எம்.எஸ் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அணி இருந்தாலும் பயமும் பதற்றமும் இன்றி பொறுமையாக அணியை வழி நடத்துவதில் எம்.எஸ் தோனி அவர்கள் சிறந்தவர் ஆவார். அதன் காரணமாகவே எம்.எஸ் தோனி அவர்களுக்கு கேப்டன் கூல் என்ற பெயரும் உண்டு.

 

எம் எஸ் தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை, சேம்பியன்ஸ் டிராபி என மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் எம் எஸ் தோனி வென்று கொடுத்துள்ளார். மேலும் ஆசிய கண்டத்தில் இருக்கும் கிரிக்கெட் அணிகள் மட்டும் பங்கேற்கும் தொடரான ஆசிய கப் தொடரையும் இவர் வென்று கொடுத்துள்ளார்.

 

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற எம் எஸ் தோனி அவர்கள் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

 

எம்.எஸ் தோனி அவர்கள் ஜூலை 7ம் தேதி அவருடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதற்கு மத்தியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கும் எம்.எஸ் தோனி அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் எம்.எஸ் தோனிக்கு 77 அடி உயரம் கொண்ட கட்அவுட்டை வைத்து அசத்தியுள்ளார்.

 

அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை கட்-அவுட்டாக வைத்துள்ளார். இதே போல ஹைதராபாத்தில் மற்றொரு ரசிகர் எம் எஸ் தோனி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து 52 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்தியுள்ளார்.

 

Exit mobile version