இந்திய அணியின் முக்கிய வீரரை புகழ்ந்து தள்ளிய கேப்டன் விராட் கோலி!

0
110

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது.

இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கின்றார். அந்த சமயத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தொடர்பாக அவர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.

முகமது சிராஜ் எப்பொழுதும் திறமையான பந்துவீச்சாளர் அவரை எனக்கு நன்றாகத் தெரியும் என்ற காரணத்தால், அவருடைய வளர்ச்சியை பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. அவருடைய திறமையை ஆதரிக்க நம்பிக்கை வேண்டும். ஆஸ்திரேலிய தொடருக்கு புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும், கொடுத்திருக்கின்றது. எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு வீரரையும் ஆட்டம் இழக்க செய்யும் வித்தையை அவர் கற்று வைத்திருக்கின்றார். இப்போது அவருடைய நம்பிக்கையும் அடுத்த கட்டத்திற்கு சென்ற இருக்கிறது. அவர்களின் பலன்களை நாம் காணலாம் என்று தெரிவித்திருக்கின்றார்.

அவரிடம் எப்போதுமே திறமை இருக்கின்றது. நம்பிக்கையும், செயல்படுத்தும் விதத்திலும் மாற்றம் உண்டாகி இருக்கிறது. அவர் இதுபோன்ற பந்து வீச்சாளராக தான் இருக்கப் போகின்றார். எந்தவிதமான அச்சமும் இல்லாமல் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய அவர் உறுதியாக இருப்பார் அவர் பின்வாங்க போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.