Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி : தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்திய பொல்லார்ட்

கொரோனா வைரஸ் காரணமாக சில மாதங்கள் கிரிக்கெட் போட்டி ஏதும் நடைபெறவில்லை. எனினும் நிலைமை கட்டுக்குள் வந்ததால் சில விதிமுறைகளுடன் மீண்டும் கிரிக்கெட் போட்டி விளையாட அனுமதி வழங்கப்பட்டது. அதில் மிக முக்கியமானவை கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தில் உமிழ்நீர் உபயோகிக்க தடை செய்யப்பட்டது. உமிழ்நீர்  மூலம் கொரோனா பரவலை தடுப்பதற்கு இதனை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரண் பொல்லார்டு அந்த தவறை செய்தது தற்போது புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் மூன்று முறை பட்டம் வென்ற கிரண் பொல்லார்டு அணியான  டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தன. அதன்படி முதலில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் கிரண் பொல்லார்டு பந்தில் உமிழ்நீர்  பயன்படுத்தியுள்ளார். இதனால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. 

Exit mobile version