வெங்கலப் பதக்கம் வென்றது இந்திய ஆண்கள் அணி! கொண்டாட்டத்தில் பெண்கள் ஹாக்கி அணி!

0
120

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இன்று வெங்கலப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணியை ௫-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்று இருக்கிறது 1980-ஆம் வருடத்திற்குப் பின்னர் இந்திய ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது.பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. பெனால்டி வாய்ப்புகளை இந்திய அணி வாரி வழங்கியது. இருந்தாலும் அதனை இந்திய அணியின் கோல் கீப்பர் மிக சாதுரியமாக தடுத்து கோல் விழாமல் தடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.

அதிலும் குறிப்பாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு ஜெர்மனி அணிக்கு கிட்டியது அதனை கோளுக்கு செல்லாமல் தடுத்து இந்திய வீரர் பதக்கத்தை உறுதி செய்தார். ஆட்டம் மிகவும் உன்னிப்பாக நடைபெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது.கடைசியில் இந்திய அணி 5 4 என்ற செட் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவு செய்தது வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.அதே போல இந்திய பெண்கள் ஹாக்கி அணியும் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது. கடந்த 1980ம் வருடத்திற்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறது.

அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்த பின்னரும் இந்திய அணி பதக்கத்தை வென்று மறுபடியும் சாதனை படைத்திருப்பது கொஞ்சம் நிம்மதியை தருகிறது. குறிப்பாக ஆண்கள் அணியும் வெற்றியை பெண்கள் ஹாக்கி அணியை சார்ந்தவர்கள் ஆண்கள் ஹாக்கி அணி விளையாடுவதை நேரடியாக பார்த்து தன்னுடைய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.இந்திய ஆண்கள் ஹாக்கி அணி போலவே மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெங்கலப் பதக்கத்திற்க்கான போட்டியில் விளையாட இருக்கிறது. இந்திய பெண்கள் ஹாக்கி அணியும் நிச்சயம் வெற்றி பெற்று இந்திய தேசத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.